கோவா முதலமைச்சராக பதவி ஏற்றார் பிரமோத் சாவந்த்

கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் ஆளுங்கட்சியான பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 பேர் ஆதரவு அளித்த நிலையில்…

கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார்.

கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் ஆளுங்கட்சியான பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 பேர் ஆதரவு அளித்த நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று பனாஜியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் விஸ்வஜித் ராணே, ரவி நாயக், சுபாஷ் ஷிரோத்கர் உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.