பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட பிரளய் என்னும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சுருக்கமாக டிஆர்டிஓ (DRDO) என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனமானது இந்திய ஆயுதப் படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

இந்நிலையில், இன்று டிஆர்டிஓவால் நடத்தப்பட்ட பிரளய் என்னும் ஏவுகணை சோதனை வெற்றிப்பெற்றுள்ளது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டது.

பிரளய் ஏவுகணை என்பது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய விமானப்படையின் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.