பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப் ஆண்டனி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மீண்டும் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, நிக்ஷன், சரவணன்,…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மீண்டும் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, நிக்ஷன், சரவணன், கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் உரிமைக் குரல் எழுப்பி பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என சக போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றச்சாட்டினர்.  இதை கேட்ட தொகுப்பாளர் கமல்ஹாசன் பிரதீப்பை அதிரடியாக வீட்டிலிருந்து வெளியேற்றினார்.  இந்த முடிவு நியாயமற்றது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது குறித்து பிரதீப் ஆண்டனி தனது  X தளத்தில் கூறியிருப்பாவது, “நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் நான் சிறப்பான முறையில் விளையாடுவேன்.  நிகழ்ச்சியில் நான் முறையாக நடந்து கொள்வேன் என சத்தியம் செய்கிறேன்.  ஒரு படத்தின் இடைவெளி முடித்து வரும் 2ம் பாதி போல பழிவாங்கி விளையாடுவேன்” எனக் குறிப்பிட்டு டிவி, கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

அதற்கு அடுத்த பதிவில், ” எண்டமால் நிறுவனம் என்னை மீண்டும் உள்ளே அனுப்புவது குறித்து யோசித்தால்,  எனக்கு 2 போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்கான 2 ரெட் கார்ட்டுகள் வேண்டும்,  பிக் பாஸ் போட்டியில் நான் கேப்டனாக வேண்டும்” என நிபந்தனைகளும் விதித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.