ஓடிடியில் வெளியானது #PrabhuDeva-வின் ஜாலியோ ஜிம்கானா!

பிரபு தேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான…

#PrabhuDeva's Jalio Gymkhana released on OTT!

பிரபு தேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொய்க்கால் குதிரை, பாகீரா, பேட்ட ராப்’ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதனை தொடர்ந்து விஜயின் ‘கோட்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்திருந்தார். இப்படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கடந்த நவ.22ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.