பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 69 பேர் பலி..!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 69 பேர் உயிர்ழந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். இந்நாடு நில அதிர்வுப் பிளவுகளின் பசிபிக் “நெருப்பு வளையம்” பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலியில் நேற்று இரவு மத்திய பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான போகோ நகரில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவலின் படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணியளவில் ஏற்ப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் நிலவரப்பில் இருந்து 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.