பிரபல பைக் ரைடரும் யூ டியூபருமான அகஸ்தியா சவுகான் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல பைக் ரைடரும், யூடியூபருமான அகஸ்தியா சவுகான், மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் தனது பந்தய பைக்கை ஓட்டிச் சென்ற போது, சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
யூ டியூப்பில் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட அகஸ்தியா, ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது, யமுனா விரைவுச்சாலையின் இந்த விபத்து நிகழ்ந்தது.
25 வயதான அவரது அகால மறைவு அவரது லட்சக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலை தடுப்பில் அவரது பைக் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகஸ்தியா அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், அலிகார் மாவட்டம் தப்பல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றியது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கிரேட்டர் நொய்டா ஜெவாரில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.







