தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான கசான் கான் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992ல் வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார்.
இவர் தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞர், சேதுபதி ஐ.பி.எஸ், பிரியமானவளே உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். இவர் கடைசியாக மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘லைலா ஓ லைலா’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், கசான் கான் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




