வெளியான இரண்டே நாளில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா? -லேட்டஸ்ட் அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த…

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரப்படி 58 – 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இரண்டாவது நாளான இன்று உலக அளவில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.