பொன்னியின் செல்வம் திரைப்படன்-2 தமிழ் சினிமாவின் பெருமை மற்றும் தமிழின்
பெருமை என நடிகர் கமலஹாசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை, அடையார் உள்ள NFDC TAGORE FLIM CENTER -ரில் நடிகர் கமலஹாசன்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய கமலஹாசன், சினிமா தான் என்னுடைய முதல் அடையாளம்,சினிமா கலைஞர் என்பது என்னுடைய இரண்டாம் அடையாளம். என்னுடைய முதல் ஆசை, விருப்பம் எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நான் நடித்த திரைப்படம் ஆக இருந்தாலும் சரி மற்றவர்கள் நடித்த திரைப்படம் ஆக இருந்தாலும் சரி. ஆனால் அந்த திரைப்படமாக நல்ல திரைப்படமாக இருக்க வேண்டும் அத்தகைய திரைப்படமாக
இந்த படம் அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.
இந்த திரைப்படம் ஒரு முழு காவியமாக அமைந்துள்ளது. கருத்து வேறுபாடு மாற்று
கருத்துக்கள் எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கும். இந்த திரைப்படத்தை மக்கள் பெரிதாக விரும்புகிறார்கள். அதை நான் செய்திகளின் மூலம் அறிந்து கொள்கிறேன்
இது தமிழ் சினிமாவின் பெருமை மற்றும் தமிழின் பெருமை. இந்த படத்தை எடுப்பதற்கு
ஒரு தனி துணிச்சல் வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினம் அவர்களை முக்கியமாகப் பாராட்ட வேண்டும். இந்த திரைப்படத்தை வெற்றிகரமாகக் கொடுக்க அவருக்கும் உறுதுணையாக தோள் கொடுத் நட்சத்திர பட்டாளத்திற்கு மிகப்பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு சந்தோஷமாக ஒரு பொற்காலம் தொடங்கியுள்ளதாகக் கருதுகிறேன். அதனை எல்லோரும் அப்படியே எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.
மேலும், இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக வடநாட்டிலிருந்து தென்னாட்டிலிருந்து போராடி உள்ளனர். இது ஒரு போற்றப்படவேண்டிய ஒரு வெற்றி. இந்த திரைப்படத்தில் 1000 கணக்கான நபர்கள் வேலை செய்துள்ளார்கள். இந்த திரைப்படம் பார்க்கும் பொழுது இந்தியாவைப் பார்ப்பது போல் இருக்கிறது. மணிரத்னம் இந்த திரைப்படத்தைச் சிறப்பாக இயற்றி உள்ளார்.







