’கண் முழுச்ச நாள் முதலா’ – கவனம் பெறும் #KozhipannaiChelladurai திரைப்பட பாடல்!

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள்…

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது.

இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவன தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ‘காத்திருந்தேன்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’கண் முழுச்ச நாள் முதலா’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.