பொங்கல் பண்டிகை – கனிமொழி எம்பி வாழ்த்து!

தூத்துக்குடி நாடாளுமன்ற எம்பி கனிமொழி கருணாநிதி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்போம்.

அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் உழவர் பெருமக்களால் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் கனிமொழி எம்பி. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது;

உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.