முக்கியச் செய்திகள்

கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

இந்தியா முழுவதும் நாளை நடைபெற உள்ள கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேச மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி பணிகள் பிரதமர் நிகழ்வுகளுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை 3 ஆயிரத்து 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி குறித்த சந்தேகங்களை தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1075 என்ற உதவி எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தடுப்பூசிப் பணிகள் அனைத்தும் கோவின் என்ற மென்பொருள் வழியாக ஒருங்கிணைக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. தமிழகத்தில் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடனும், பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமையிடத்து மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்களிடமும் காணொலி காட்சி வழியாக பிரதமர் உரையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ராக்கெட்ரி -நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

Web Editor

1 மணி நேரத்தில் இத்தனை கப் “டீ”யா? கின்னஸ் சாதனை படைத்த பெண்

G SaravanaKumar

தீயில் சிக்கிய சிறுத்தைக் குட்டிகளை மீட்ட வனத்துறையினர்

G SaravanaKumar

Leave a Reply