அரசு முறை பயணமாக செப்டம்பர் 4-ம் தேதி #Singapore செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

செப். 4இல் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளாது. புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்…

செப். 4இல் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளாது.

புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியதாவது, “சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 40 ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த பயணம் ஒத்துப்போகிறது.இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், புருனேயில் இருந்து பிரதமர் மோடி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.