முக்கியச் செய்திகள் தமிழகம்

மே 26ல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர்

வரும் 26 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி கலந்துகொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழக வருகையின் போது தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைக்கவுள்ள பிரதமர், மதுரை – தேனி இடையேயான அகல இரயில் பாதை திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அத்துடன், பெங்களூரு – சென்னை 4 வழி விரைவுச் சாலையின் 3ம் கட்ட பணிகள், சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, மீன்சுருட்டி – சிதம்பரம் இடையிலான புதிய சாலை உள்பட ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் வருகையின்போது, அவரை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி தமிழ்நாடு வருவதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

பனியிலும் பணி செய்யும் ரயில்வே துறை; இணையத்தை கலக்கும் வீடியோ!

Jayapriya

தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

4 வது டெஸ்ட்: ஜடேஜா, ரஹானே, விராத் அடுத்தடுத்து அவுட்

Ezhilarasan