தூய்மை இந்தியா 2.O: தொடங்கிவைத்தார் பிரதமர்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் பொருட்டு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தினை பிரதமர் மோடி…

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் பொருட்டு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல் தண்ணீர் பாதுகாப்பு திட்டமான அம்ருட் 2.0 திட்டத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தினை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, குப்பைகளற்ற நகரங்களை உருவாக்குவதே தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் நோக்கம் எனக் கூறினார். ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது உள்ளிட்டவை திட்டத்தின் முக்கிய இலக்கு எனத் தெரிவித்தார்.

தூய்மை திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதன் காரணமாகவே குஜராத்திற்கு தனி அடையாளம் கிடைத்தது எனக் கூறிய பிரதமர் மோடி, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.