கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் கடின உழைப்பை செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய திருப்புனையாக கோவாக்சீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்ததன் மூலம் கொரோனா இல்லாத இந்தியா உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் கடின உழைப்பை செலுத்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவத் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.