வேட்டி-சட்டையில் வந்த பிரதமர், முதலமைச்சர்: சர்வதேச கவனம் ஈர்த்த தமிழர் பாரம்பரியம்

இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் நடப்பட்ட பிரம்மாண்ட மைல்கல்லாக அமைந்துள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வேட்டி சட்டையில் வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜொலித்தார். சுமார்…

இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் நடப்பட்ட பிரம்மாண்ட மைல்கல்லாக அமைந்துள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வேட்டி சட்டையில் வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜொலித்தார்.

சுமார் 100 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக 44வது செஸ் ஒலிம்பியாட்டின் பிரம்மாண்ட தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிவ் நடைபெற்று வருகிறது.தொடக்க விழா நிகழ்ச்சிகளில்  தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமைகளை பறைசாற்றும், வகையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை கூறும் பதிவுகள்,  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் பெருமைகள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சிலம்பத்தின் விளக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில், காணொலிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றிருந்தன. அவை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சர்வதேச நாட்டவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

 தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சாவூர் பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் குறித்த காணொலியும், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் குறித்து பெருமிதம் தெரிவிக்கும் காணொலியும் இடம்பெற்றிருந்தன. நடிகர் கமல்ஹாசனின் குரலில் தமிழர் பெருமை கூறும் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” காணொலி[யம் இடம்பெற்றிருந்தது. இ்நத வரிசையில்,  தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய உடைகளின் பெருமைகளை  நிகழ்ச்சிக்கு வந்திருந்த  சர்வதேச நாட்டவர்களிடம் பறைசாற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பளிச்சென பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்திருந்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடியும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்து அசத்தினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.