“ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும்!” – #ஜெய்ஷா அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை…

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்” என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.