ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரஷர் குக்கரை, ரத்து செய்த நிலையிலும் 2ஆண்டுகளுக்கு டெலிவரி ஆனதாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு சந்தைக்குச் சென்றுவந்த காலம் கடந்து, தற்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இந்த காலத்தில் அனைத்துப் பொருட்களையுமே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவிட்டால் போதும், அடுத்த சில நாட்களில் கைக்கு கிடைத்து விடுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு, பின்பு ரத்து செய்த நிலையிலும் அந்தப் பொருள் திரும்பக் கிடைக்கப் பெற்றதாக ஒருவர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் என்பவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்” என தெரிவித்துள்ளார். அவரது பதிவில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அன்று பிரஷர் குக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று ஆர்டரை பெற்றுள்ளார். இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் இருந்து பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் ஆர்டரை ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். ஆர்டரை ரத்து செய்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆர்டர் செய்த பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்தே அந்தப் பதிவைப் போட்டுள்ளார். அவருடைய பதிவுக்கு பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.







