சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசனின் 133-வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழிசை செளந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்திற்கு மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
மேலும், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







