மக்களின் கோபமும், I.N.D.I.A கூட்டணியின் வலிமையும் பாஜகவை மூழ்கடிக்கப் போவது உறுதி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

மக்களின் கோபமும், I.N.D.I.A கூட்டணியின் வலிமையும் பாஜகவை மூழ்கடிக்கப் போவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாஜகவினர்…

மக்களின் கோபமும், I.N.D.I.A கூட்டணியின் வலிமையும் பாஜகவை மூழ்கடிக்கப் போவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாஜகவினர் பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். 900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்திலும், 2 ஆயிரத்து 700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் மழை வெள்ளம் தேங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி, மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் I.N.D.I.A கூட்டணியின் வலிமையும் மூழ்கடிப்பது உறுதி எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.