பெட்ரோல்-டீசல் நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம்!

பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு வரும் வடிகையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா…

பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு வரும் வடிகையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் கொரோனா பரவ தொடங்கிய 06.07.2020 அன்று முதல் அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்க முடியும் என்பதையும் அப்போதே தெளிவுப்படுத்தி இருந்தோம்.

தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், வருகின்ற 10.04. 2021 முதல் மீண்டும் முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாட்டு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.