முக்கியச் செய்திகள் தமிழகம்

குரங்கிற்கு சிகிச்சை அளித்த மக்கள்

சேலம் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்த குரங்கை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிக்கனம் பட்டி ஊராட்சி குப்பூர் பகுதியில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் குரங்கு
தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. அந்த குரங்கை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்து பின்பு வனத்துறையிடம்
ஒப்படைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓமலூர் அருகே சேர்வராயன் மலைத் தொடர் ஒட்டிய பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு காட்டெருமை, முயல், மான், குரங்கு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உணவு இன்றியும், தண்ணீர் இன்றியும் பல்வேறு விலங்குகள் கிராம பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கிறது.

இந்த நிலையில் இன்று வன பகுதியிலிருந்து இரண்டு குரங்குகள் தண்ணீர் தேடி ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி ஊராட்சி பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் ரோட்டை கடக்கும் பொழுது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்துகுரங்கின் மீது மோதியது. இதில் இரண்டு குரங்குகளும் தூக்கி வீசப்பட்டது.

இதில் ஒரு குரங்கிற்கு லேசான காயம் எற்பட்டதால் அது உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டது. படுகாயமடைந்த மற்றொரு குரங்கை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  அவர்களிடம் குரங்கை ஒப்படைத்தனர்.

விபத்தில் காயமடைந்த குரங்கை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்

Web Editor

கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

Halley Karthik

அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் 2 முறை ரத்து

G SaravanaKumar