ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்கிற அதிமுக தேர்தல் வாக்குறுதியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டது என முதலமைச்சர் எடப்பாடி கூறியது குறித்த பத்திரியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.







