PBKSvsSRH : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் 69வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி…

ஐபிஎல் 69வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.  இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.  அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.  இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 69-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று,  புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள் : “தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம்” – அரவிந்த் கெஜ்ரிவால்!

ஹைதராபாத் அணி இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.  தொடர்ந்து, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 5 வெற்றிகளுடன்,  10 புள்ளிகள் பெற்றுள்ளது.  இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.  இதில் ஹைதராபாத் அணி 15 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில்  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.