33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தொடங்கியது ‘பத்து தல’ படத்தின் டிக்கெட் புக்கிங்; உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!

பத்து தல படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளதாக  தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில்,  ‘பத்து தல’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading