இயக்குநர் பாக்யராஜ் மறைவு – ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இரங்கல்…!

இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவாது :

” மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,தமிழ்நாடு ஆளுநர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.