பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்

பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி…

பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி காலவரையற்ற தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 400 பகுதி நேர ஆசிரியர்களை திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது தொடர் காலவரையற்ற போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், 100 க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வந்து கொண்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.