பகுதி நேர பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை

தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர…

தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 013

2) அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் – 636 011

3) அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி – 627 007

4) அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி,
காரைக்குடி – 630 004

5) தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் – 632 002

6) அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் – 635 104

7) கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் – 641 014

8) தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை – 625 015

தகுதி
விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர் http://www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவம் கிடைக்கும் நாள்
ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்
தொடங்கும் நாள் : 04.07.2022
முடிவுறும் நாள் : 03.08.2022

பதிவுக்கட்டணம்
பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம்

விவரங்கள்
இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண் : 0422-2590080, கைபேசி எண். 9486977757

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.