இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய இந்தியா, 10 விக்கெட் வித்தியாசத்தில் 416 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 146 ரன்களை பதிவு செய்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ஜடேஜாவும் சதம் பதிவு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆட்டத்தில் 84 ஆவது ஓவரை இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்டு வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா, மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.
பவுண்டரிகள், எக்ஸ்ட்ரா என ஒரே ஓவரில் மட்டும் மொத்தம் 35 ரன்கள் வந்தது. இதில் பும்ராவின் பங்களிப்பு மட்டும் 29 ரன்கள் ஆகும். 145 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா 28 ரன்களை எடுத்து சாதனை பட்டியலில் இருந்தார்.
அவரது சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
பெவிலியனில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் பும்ராவின் அதிரடி ஆட்டத்தை பார்த்து அசந்து போயினர்.
டெஸ்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த டாப் 5 வீரர்கள்
- இந்திய வீரர் பும்ரா 35 ரன்கள்
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா
28 ரன்கள் - ஆஸ்திரேலியா வீரர் ஜார்ஜ் பெய்லி 28 ரன்கள்
- தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகராஜ் 28 ரன்கள்
- பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 27 ரன்கள்