வீடுகளில் கிளி வளர்க்கத் தடை

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்க்க அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. வீடுகளில் தற்போது வளர்க்கப்படும் கிளிகள் மற்றும் மைனாக்களை  உடனடியாக வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும் என…

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்க்க அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.

வீடுகளில் தற்போது வளர்க்கப்படும் கிளிகள் மற்றும் மைனாக்களை  உடனடியாக வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையெனில் வன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் வாழக்கூடிய கிளிகள் மற்றும் மைனாக்களை சிலர் பொறி வைத்து பிடித்து, அதை வீடுகளில் வளர்க்க விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஏராளமான வீடுகளில் மைனா மற்றும் கிளிகள் சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் மைனாக்கள் மற்றும் கிளிகளை உடனடியாக வனப்பகுதிக்குள் பறக்கவிட வேண்டும் என வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக கிளிகள் மற்றும் மைனாக்கள் வளர்ப்பது வனத்துறைக்கு தெரிய வந்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய வனச்சட்டத்தின் படி காடுகளில் சுற்றி திரியும் பறவைகளை வளர்ப்பது சட்ட விரோதம் என்பதால் இந்த நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருவதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.