பிரபல ரவுடிகளான ராக்கெட் ராஜா, நடுவீரப்பட்டு லெனின் மற்றும் நெடுங்குன்றம் சூர்யா ஆகிய 3 பேர் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏ பிளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 3 பேரும் ஒரு ஆண்டுக்கு சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழையக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து வேறு எதற்காகவும் சென்னைக்குள் வரக்கூடாது என்றும், இவர்களால் தீங்கு விளைவிக்கக்கூடிய சூழல் மற்றும் வன்முறை நிகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







