பான் மசாலா விளம்பரம் – பாலிவுட் நடிகர்களுக்கு பறந்த நோட்டீஸ்!

பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்து, பான் மசாலாவில் குங்குமப் பூ வலிமை உள்ளது என்ற வசனங்களை பேசி  விளம்பரப்படுத்தினர்.

இந்த நிலையில் ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம், சம்பந்தப்பட்ட  பான் மசாலா நிறுவனத்தின் தலைவர் விமல் குமார் அகர்வால் மற்றும் விளம்பரத்தில் நடித்த ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் வருகிற மார்ச் 19 ஆம் தேதி ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்பவர் அளித்த புகார் மனுவின் பேரில் நுகர்வோர் மன்றத் தலைவர் கியார்சிலால் மீனா மற்றும் உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

யோகேந்திர சிங் அளித்த புகார் மனுவில்,  “குங்குமப் பூ கிலோவுக்கு 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிவரும் நிலையில், 5 ரூபாய்க்கு விற்கப்படும் பான் மசாலாவில் குங்குமப் பூ-வை விடுங்கள் அதன்  நறுமணத்தைக் கூட சேர்க்க முடியாதா? என்று புகார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.