பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அரண்மனை 4 | லேட்டஸ்ட் அப்டேட்!

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம். அரண்மனை 4 சமீபத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல…

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

அரண்மனை 4 சமீபத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் வெளிவந்த அரண்மனை படங்களை விட இந்த 4ஆம் பாகம் சற்று வித்தியசமாக இருக்கிறது என பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.

சுந்தர் சி இயக்கி நடித்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் சுந்தர் சி-க்கு மாஸ் கம் பேக்கை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அரண்மனை 4 வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.