29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

லதா மங்கேஷ்கர் பாடலை பாடி அசத்திய பாகிஸ்தானிய பாடகர் அலி சேத்தி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆஸ்கர் விருதுக்கு முந்தைய விருந்தில் அலி சேத்தி ஜப் ஜப் பூல் கிலே திரைப்படத்திலிருந்து லதா மங்கேஷ்கர் பாடிய யே சமா சமா ஹை பியார் கா என்ற மெல்லிசைப் பாடலை பாட்யது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

திரையுலகின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விருதுகளான ஆஸ்கர் 2023க்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கொண்டாடப்பட உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவிலிருந்து, தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ என்ற சூப்பர்ஹிட் பாடலும் இந்த ஆஸ்கர் ரேஸில் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கார் 2023 எப்போது தொடங்கும்

ஆஸ்கார் விருதுகள் 2023 பற்றி பேசுகையில், இந்த முறை சர்வதேச திரைப்பட விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதை ABCயில் 8 PM ET/5 PM PTக்கு நேரலையில் பார்க்கலாம். அதேசமயம், நேர வித்தியாசம் காரணமாக, ஆஸ்கார் விருதுகள் 2023 இந்தியாவில் மார்ச் 13, 2023 திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஒளிபரப்பப்படும். இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆஸ்கர் விருதுகள் 2023 நிகழ்வை நேரலையில் காணலாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பாரமவுண்ட் ஸ்டுடியோவில் பிரியங்கா சோப்ரா நடத்திய இரண்டாவது தெற்காசிய எக்ஸலன்ஸ் ப்ரீ ஆஸ்கார் கொண்டாட்டத்தில் ஆர்ஆர்ஆர் நடிகர் ஜூனியர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரீத்தி ஜிந்தா, வீர் தாஸ் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஷானக் சென் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் பாகிஸ்தானிய பாடகர் அலி சேத்தி  ஜப் ஜப் பூல் கிலே திரைப்படத்திலிருந்து லதா மங்கேஷ்கர் பாடிய யே சமா சமா ஹை பியார் கா என்ற மெல்லிசைப் பாடலை பாட்யது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

DJ ரேகா மற்றும் ஸ்வே பாட்டியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இதில் டேனி புடி, மீனா ஹாரிஸ் மற்றும் அகாடமி தலைவர் ஜேனட் யாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading