எங்கள் போராட்டம் தொடரும்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.

நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம் என பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3 வது நாளாக தாக்குதல்…

நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம் என பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3 வது நாளாக தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்க்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி கீவ் நகரில் உள்ள அதிபர் குடியிருப்பு வளாகப் பகுதியில் தானே எடுத்த செல்ஃபி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் வாழ்க என உரக்கக் கூறி சுதந்திரத்தைப் பேணுவோம் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், கட்சி தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள், அதிபர் அலுவலகத்தின் தலைவர் இங்கு இருக்கிறார், பிரதமர் என்னுடன் இருக்கிறார், அதிபரின் ஆலோசகர் மற்றும் அதிபராகிய நானும் இங்கு தான் இருக்கிறேன்.

நம் ராணுவ வீரர்கள், குடிமக்கள் இங்கு இருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். இந்த போராட்டம் தொடரும். நம்மை காக்கும் வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். நம் ஹீரோக்களை தலை வணங்குகிறேன். உக்ரைன் வெல்லட்டும் என உயரதிகாரிகள் மத்தியில் அதிபர் பேசி இருப்பது போல அந்த வீடியோ பதிவு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.