தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வரலாறும், நவீனமும் கைகோர்க்கும் அற்புத நகரம் நம் சென்னை! ஓய்வின்றி உழைக்கும் மக்கள், பழமை மாறாத கலாச்சாரம், விண்ணை முட்டும் தொழில்நுட்ப வளர்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக ‘வந்தாரை வாழவைக்கும்’ அன்பான தாயுள்ளம் எனச் சென்னையின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எத்தகைய பேரிடர் வந்தாலும் மீண்டு எழும், நம் சென்னை மாநகரத்தின் தன்னம்பிக்கை உலகிற்கே ஓர் பாடம்.
இத்தகைய பெருமைமிகு சென்னைக்கு எனது நெஞ்சார்ந்த ‘சென்னை தின’ வாழ்த்துகள்!
சிவகங்கை மண்ணில் பிறந்து மதுரை மக்களின் பாசத்தில் வளர்ந்து,விருதுநகர் மக்களிற்காக டெல்லி பாராளுமன்றத்தில் பணியாற்றி வரும் என் வாழ்கை பயணத்தில் இப்போது ஒரு புதிய இல்லமாக, புதிய முகவரியாக மாறியிருக்கிறது சிங்கார சென்னை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, ஒரு புதிய ‘சென்னைவாசியாக’ இந்த நகரத்தின் அன்பை அனுபவிப்பதிலும், உங்களோடு ஒருவனாக இந்த நாளைக் கொண்டாடுவதிலும் நான் பெருமை கொள்கிறேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




