தேவர் ஜெயந்தி: 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓபிஎஸ்

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை…

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது
குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க
தேவரின் வெங்கல சிலைக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தேனி
நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டவடத்தில் உள்ள ராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி தேவர் கவசத்தை வழங்கினார். பின்னர் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர் செல்வம், தேவர் தான் வாழ்ந்த காலத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். மக்கள் அனைவரும் சாதி,மத பேதமின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் தேவர்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் குருபூஜை நாட்களில் சாற்றுவதற்காக அதிமுக சார்பில் 13 கிலோ தங்கக் கவசம் வழங்கி, அது குரு பூஜை நேரத்தில் தேவர் நினைவிட சிலைக்கு சாற்றப்பட்டு, குருபூஜை முடிந்த பின் வங்கியில் சென்று நான் பொருளாளர் என்ற அடிப்படை அதை பெற்று வழங்கி வந்தேன். கடந்த 2017ம் ஆண்டு, இந்த ஆண்டு தங்க கவசத்தை பெற்று வழங்க முடியாத சூழல் இருந்தது.

நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், காந்திமீனாளிடமும் தங்க கவசத்தை வழங்க ஆட்சியேபனை இல்லை, குருப்பூஜைக்கு தங்க கவசத்தை வழங்க வேண்டும் என 25 நாட்களுக்கு முன்பே வங்கியில் கடிதத்தை வழங்கினோம். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் தான் தற்காலிக அதிமுக பொருளாளர் என்று கூறி தங்கக் கவசத்தை தன்னிடம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி மாவட்ட அலுவலரிடமும் அறக்கட்டளையிடமும் தங்க கவசம் வழங்கப்பட்டு தேவருக்கு சாற்றப்பட்டு உள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதன் அடிப்படியிலேயே10 .5 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கப்பட்டு உள்ளது. அறக்கட்டளையினர் தேவைப்படும் போது இந்த வெள்ளிக் கவசத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதிமுகவின் ஒன்றரை கோடித் தொண்டர்களும் இணைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.