தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளுக்கு 1 எம்பிக்கள் கூட இல்லை.
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்தார். இதன் பலனாக எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும் ,இன்றும் நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கிட்டத்தட்ட 38 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்க உள்ளனர்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்பிக்கள் பட்டியலில் பாஜகவிற்கு மட்டுமே மக்களவையில் அதிக எம்பிக்கள் ( 301 எம்பிக்கள் ) உள்ளனர். கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சி 13 எம்பிக்களும், ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ளனர். மீதமுள்ள 8 கட்சிகளுக்கு வெறுமனே ஐந்திற்கும் குறைவான எம்பிக்களே உள்ளனர், அவர்களில் பெரும்பாலும் 1 எம்பிக்களை மட்டுமே உள்ளனர். அதேபோல கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளுக்கு ஒரு மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ ஒரு எம்பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் , திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 9 கட்சிகளுக்கு ஒரு எம்பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-யாழன்







