தமிழகத்தில் பணவீக்க விகிதம் குறைவுக்கு காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 சதவீதத்திலிருந்து 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பணவீக்கம் ஏற்பட்டுள்ளதா என்றால் அப்படி கிடையாது என்பதே பதில். பல…

இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 சதவீதத்திலிருந்து 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எனினும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பணவீக்கம் ஏற்பட்டுள்ளதா என்றால் அப்படி கிடையாது என்பதே பதில். பல மாநிலங்களில் இது 9 சதவீதத்தை தாண்டிய நிலையில் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 சதவீதமாக மட்டுமே உள்ளது. கேரளாவில் 5.08 சதவீதமாக பணவீக்கம் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 9.12 சதவீதமும், தெலங்கானாவில் 9.02 சதவீதமும், ஹரியானாவில் 8.98 சதவீதமாகவும் பணவீக்கம் உள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, ஹிமாசலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலுடன் ஒப்பிடுகையில் குறைவான பணவீக்கம் உள்ளது.

வீடுகளுக்கான சரக்கு மற்றும் சேவைகளின் விலை ஏற்றத்தை நுகர்வோர் விலை குறியீடு குறிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் விட கேரளாவில் குறைந்த பண வீக்க விகிதம் இருக்கிறது. கொரோனா காலத்துக்கு முன் தேசிய அளவில் கேரளாவும், தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. இப்போது எப்படி குறைந்திருக்கிறது? என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் உயராததும் நுகர்வோர் விலை குறியீடு குறைவாக இருப்பதற்கு காரணமாகும்.
மேலும், தமிழக அரசு பெண்களுக்கு குறிப்பிட்ட பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை அரிசியின் விலை கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. கடந்த மே 17ஆம் தேதி கிலோ அரிசியின் விலை ரூ.52 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2021 இல் இதே விலை ரூ.57ஆக இருந்தது. 2019-21 இல் எடுக்கப்பட்ட தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல ஆய்வில் தமிழகத்தில் 6.5 சதவீதத்தின் தான் சொந்தமாக கார் வைத்திருக்கின்றனர். எனவே, பெரும்பாலானோர்களை பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிக்கவில்லை.

ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஒட்டுமொத்த நுகர்வு குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனிடையே, “ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் பணவீக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இச்சாதனை தொடரும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.