“டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்!” – உச்ச நீதிமன்றம்

டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வருகின்ற நவம்பர் 8-ஆம் தேதி நாடுமுழுவது தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கடுமையான காற்று மாசுபட்டுள்ள டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த டெல்லி காற்று மாசு வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காற்று மாசை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் விவகாரத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

எவரும் மத ரீதியாக புண்பட்டு விடக்கூடாது எனவே மக்கள் தாங்களாகவே நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய பட்டாசு எவை , குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசு எயவை என்பது குறித்த விழிப்புணர்வுடன் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் உள்ளிட்டவை முறையாக பின்பற்ற வேண்டும். பசுமை பட்டாசுகளை மட்டும் விற்க, வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நீதிமதிகள் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கை விரிவாக விசாரிக்க 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.