தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவு எனவும் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
67 ஆயிரமாக இருந்த வாக்குச்சாவடிகளை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.