டெல்லியில் அரசு பேருந்து மோதி ஒருவர் பலி… வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

டெல்லி ரோகினி பகுதியில் மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள விஷ்ரம் சவுக் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில்…

டெல்லி ரோகினி பகுதியில் மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள விஷ்ரம் சவுக் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ.

கார் ஆகிய வாகனங்கள் மீது வேகமாக மோதியது. பின்னர் அந்த பஸ் நிற்காமல் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வானகங்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தப்பி ஓட முயன்ற பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SaswatPanigrahi/status/1720839050154704928

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.