13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கூட்டணி… ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் #Dhanush!

செல்வராகவின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில்…

One in a thousand alliance after 13 years... #Dhanush to release first look!

செல்வராகவின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன்’ படம் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன்.

‘பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.இந்த சூழலில், செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகிறது. இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.