முக்கியச் செய்திகள்செய்திகள்சினிமா

நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு, ’டீசல்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளில் ‘டீசல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை ‘எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

 

இந்நிலையில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி, அவர் நடித்து வரும் ‘டீசல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் இந்தாண்டு ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பாகிஸ்தான் ராணுவத்தில் முதல் பெண் பிரிகேடியர்!

Web Editor

இந்து மக்கள் கட்சி நிர்வாகி பைக் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு

EZHILARASAN D

“இலவசங்கள் வழங்கி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்” – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading