தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் சூழலில் சமீபத்தில் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்மூலம் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அவரது குடும்பத்தினர் 6 பேர் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்கள் அனைவரும் இரண்டு தவனை தடுப்பூசி, சமூக இடைவெளி, கை கழுவுதல், கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.