வெளியானது OMG 2 படத்தின் புதிய போஸ்டர்; அக்ஷய்குமார் ரசிகர்கள் உற்சாகம்!

  பல நாள் எதிர்பார்ப்பிலிருந்த ரசிகர்களுக்கு அக்ஷய் குமார் OMG 2 பற்றிய புதிய அப்டேட் கொடுத்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படத்தினை…

 

பல நாள் எதிர்பார்ப்பிலிருந்த ரசிகர்களுக்கு அக்ஷய் குமார் OMG 2 பற்றிய புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படத்தினை 2டி எண்டர்டெயிமெண்ட் நிறுவனத்துடன் இணைந்து அருணா பாத்யா மற்றும் விக்ரம் மல்கோத்ரா தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ராதிகா மதன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், OMG 2 இன் புதிய போஸ்டரை அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். இதில் யாமி கெளதம் மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை அமித் ராய் எழுதி இயக்கியுள்ளார். இது அக்‌ஷய் மற்றும் பரேஷ் ராவலின் 2012ம் ஆண்டு வெளியான   OMG – ஓ மை காட் திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும் .

அக்‌ஷய்யின் சிவபெருமானின் தோற்றத்துடன் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. டீசருக்கான கவுண்ட்டவுனை தொடங்கும் வகையில் அக்ஷய் குமார் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். விரைவில் டீசர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது கதர் 2 படத்துடன் திரையரங்குகளில் மோதவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.