வாடகை தர முடியாமல் சிரமப்படுவதாக பதிவிட்ட ஒலிம்பிக் வீராங்கணை – உதவ முன்வந்த ரெடிட் இணை நிறுவனர்!

ஒலிம்பிக் தடகள வீராங்கணை வெரோனிகா ஃப்ரேலி தான் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில், ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் மற்றும் ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் ஆகியோர் உதவ…

ஒலிம்பிக் தடகள வீராங்கணை வெரோனிகா ஃப்ரேலி தான் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில், ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் மற்றும் ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் ஆகியோர் உதவ முன் வந்தனர். 

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும்.  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.  இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்க தடகள வீராங்கணையான வெரோனிகா ஃப்ரேலி தனது வாடகையை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று நேற்று (ஆகஸ்ட் 1) இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இது குறித்து அவர் கூறும்போது, “நான் நாளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறேன், எனது வாடகையை கூட என்னால் செலுத்த முடியாது. எனது பள்ளி 75% மட்டுமே அனுப்பியது, அவர்கள் கால்பந்து வீரர்களுக்கு (எதையும் வெல்லாதவர்கள்) புதிய கார்கள் மற்றும் வீடுகளை வாங்க போதுமான அளவு செலுத்துகிறார்கள்” என பதிவிட்டிருந்தார்.

இவரின் பதிவு சிறிது நேரத்திலேயே, ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் மற்றும் ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் வெரோனிகா ஃப்ரேலிக்கு (இவரின் உண்மையான பெயர் வில்லியம் டிரேட்டன் ஜூனியர்) உதவ முன்வந்தனர்.  அவருக்கு பதிலளித்த ஃப்ளேவர் ஃப்ளேவ் “எனக்கு புரிந்தது.  நான் இன்று பணம் அனுப்புகிறேன்,  எனவே நீங்கள் நாளை அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ”என்றார்.  ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், ராப்பருடன் செலவைப் பிரித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இணை நிறுவனர் ஃப்ரேலிக்கு 7,760 டாலர் அனுப்பியதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.