கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் : அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில்…

கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இன்று முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரை விட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசின் நடவடிக்கையை கவனிக்க வேண்டும். பின்னர் எங்களுக்கு உள்ள ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவது தான்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா என்பது தொடர்பாக வரும் 21 தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு வந்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.
இப்பிரச்சினை ஆரம்பித்ததோ அப்போது இருந்தே பிரச்சனை தான். நடுவர் மன்றத்தில் நாடி பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடினோம்.கெசட்டில் கொண்டு வந்தோம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை தான் நாட வேண்டியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து நிச்சயம் நிவாரணம் வாங்கி தருவோம். பேச்சுவார்த்தைக்கு சென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் வலுவிலக்கும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை திமுக வலியுறுத்த வேண்டும் என்று பேசு தேவையில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.