31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரே கூண்டில் 76 குரங்குகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிரப்பாக்கத்தில் 76 குரங்குகளை ஒரே கூண்டில் அதிகாரிகள் அடைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதேநேரம், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “அத்தனை குரங்குகளை ஒரே கூண்டில் அடைத்தது மனிதாபிமானமற்ற செயல்” என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து குரங்குகளையும் ஒரே கூண்டில் எடுத்துச் சென்றோம். அதேநேரம், உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. அரை மணி நேரத்தில் ராமாபுரத்தில் உள்ள வனப் பகுதியில் அந்த குரங்குகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன.

இந்தக் குரங்குகளுக்கு உணவளிக்க முடியாது என்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பன்கள், பிரெட், ஸ்நாக்ஸ், பழங்களை தருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை 300-க்கும் அதிகமான குரங்குகள் பிடிக்கப்பட்டன.

அச்சிரப்பாக்கம் பஞ்சாயத்து உதவியுடன் இந்தக் குரங்குகள் பிடிக்கப்பட்டன.
அந்தப் பகுதியில் வீடுகளில் புகுந்து உணவுகளை குரங்கு எடுத்துச் சென்றுவிடுவதாக புகார் வந்தது. அதன் பேரிலேயே குரங்குகளை பிடித்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

EZHILARASAN D

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

Jayakarthi

மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Gayathri Venkatesan